டாஸ்மாக்கில் மது விற்பனை அமோகம்; ஒரே நாளில் ரூ.426.24 கோடிக்கு மது விற்பனை: முதலிடத்தில் சென்னை

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 426.24  கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் நாளை முதல் முழு ஊரடஙூகு அமல்படுத்தப்படுகிறது. ஆகவே நாளை முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மது கடைகள் இயங்காது என அரசு அறிவித்திருந்தது. இதை கருத்தில் கொண்டு மது பிரியர்கள் நேற்று ஒரே நாளில் 426 கோடிக்கு மது வாங்கிச் சென்றுள்ளனர். அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ. 100.43 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

இரண்டாம் இடமாக மதுரை மண்டலத்தில் ரூ.87.28 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. திருச்சி மண்டலத்தி்ல் ரூ.82.59 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சேலம் மண்டலத்தில் ரூ.79.82 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. கோவை மண்டலத்தில் ரூ.76.12 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் முழு ஊரடங்கு என்பதால் மது விற்பனை அதிகரித்துள்ளது.

Related Stories: