காசிமேட்டில் 2 வாரங்களுக்கு பிறகு மீண்டும் மீன் சந்தை திறப்பு: கொரோனாவை மறந்த மக்கள்

சென்னை: காசிமேட்டில் 2 வாரங்களுக்கு பிறகு மீண்டும் மீன் சந்தை திறக்கப்பட்டுள்ளது. நாளை முதல் முழு ஊரடங்கு என்பதால் மீன் சந்தை இரண்டுவாரங்களுக்கு பிறகு மீண்டு திறக்கப்பட்டுள்ளது. பொதுவாக காசிமேடு மீன் சந்தை என்றாலே விடுமுறை நாட்களில் திருவிழா போன்று காட்சியளிக்கும். வெளிப்பகுதிகளில் இருந்து ஏராளாமான மக்கள் மீன் வாங்குவதற்கு இங்கு வருவது வழக்கம்.

இதனால் வழக்கமாக ஞாயிற்று கிழமைகளில் காசிமேடு என்பது கூட்ட நெரிசலுடன் காணப்படும். இந்நிலையில் கடந்த மாதத்தில் இருந்து தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கட்டுப்பாடுகளுடன் இங்கு மீன்கள் விற்கப்பட்டு வந்தது. இதனையடுத்து கடந்த 2 வாரங்களாக சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மீன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் வெள்ளி கிழமைகளில் மீன்களை வாங்கி பதப்படுத்தி சமைத்து வந்தனர்.

இதனையிடையே தற்போது நாளை முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மீன் விற்பதற்கும் குறிப்பிட்ட கால அளவு நிருணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காலை 6 மணி முதல் 12 மணிவரை மட்டுமே மீன் விற்பனை செய்ய வேண்டுமென கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருந்த போதும் காசிமேடு மீன் சந்தையில் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவி வருவதால், இங்கு கூட்டத்தை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்தெல்லாம் நேற்று காவல்த்துறையினர் காசிமேடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதன்படி மீன் மொத்த விற்பனைக்கு ஓரிடமும், சில்லறை விற்பனைக்கு ஓரிடமும், ஏலம் விடுவதற்கு ஓரிடமும் என தனித்தனி பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதை தொடர்ந்து இன்று மீன் விற்பனைக்கு தடை எதுவும் இல்லை என்பதனால் அதிகாலை முதல்லெ ஏராள்மானக்குட்டம் குவிந்து வருகிறது. மீன் பிடி தடைகாலம் அமலில் இருந்தாலும் சிறிய விசைப்படகுகளில் பிடித்து கொண்டுவரப்படும் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இவையனைத்தும் தற்போது ஒரே இடத்தில் மீன் விற்பனை செய்யம் அளவிற்கு மீன் வளத்துறை அதிகாரிகளும்,காவல்த்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்துள்ளார்.அதன் அடிப்படையில் தற்போது மீன் விற்பனை நடைபெற்று வருகிறது. இருந்த போதும் இப்பகுதியில் கட்டுப்பாடுகள் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. முக கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் தொடர்ந்து இந்த காசி மேடு மீன் சந்தை குட்ட நெரிசலால் காணப்படுகிறது.

Related Stories:

>