பஸ்களில் பெண்களுக்கு இலவச திட்டத்துக்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு: போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று மற்றும் நாளை  மக்கள் தங்களுடைய ஊர்களுக்கு  செல்ல போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து  துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்  நிருபர்களிடம் கூறியதாவது: பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு தற்போது உள்ள நடைமுறையான 50 சதவீதம் பின்பற்றப்படும். அதில் மாற்றம் இருக்காது, கூடுதல்  பேருந்துகள் இயக்கப்படும்.கொரோனா காலம் என்பதால் பார்த்து தான் அதற்கு ஏற்றார் போல் ஏற்பாடு செய்யப்படும்.  மக்களை கூட்டம் கூடாமல் அவர்களை பத்திரமாக சேர்ப்பது அரசின் கடமையாகும்நேற்று பேருந்துகளில் பெண்கள்  இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்தது நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ஏற்கனவே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு  அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.  

அதேபோன்று நகரப் பேருந்துகளில் பெண்கள்  இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. போக்குவரத்து துறைக்கு மானியமாக ரூ.1200 கோடி தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது.  எங்கெல்லாம்  பேருந்துகளின் தேவையுள்ளதோ அதை அறிந்து முதல்வருடன் கலந்து பேசி கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாளோன்றுக்கு வழக்கமாக  இயங்கும் 3185 பேருந்துகள் இல்லாமல் 1631 சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து மட்டும் இரண்டு நாட்களில் 9636 பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படுகிறது.மேலும் மொத்தமாக 5460 பேருந்துகள் தமிழகம் முழுவதும் பெண்களுக்கு கட்டணமில்லாமல் இயக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: