சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை சிறப்பு அதிகாரியாக செந்தில்குமார் நியமனம்

சென்னை: சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சிறப்பு அதிகாரியாக செந்தில்குமார் நியமிக்கப்பட்டார். இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வரின் செயலாளராக பணியாற்றி வந்த செந்தில்குமார், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பேரிடர் மேலாண்மைத்துறை கமிஷனராக இருந்த ஜெகநாதன், பொது மற்றும் மறுவாழ்வுத்துறைக்கு  மாற்றப்பட்டுள்ளார்.

மத்திய சுகாதார மையத்துக்கு தாரேஷ் அகமது மாற்றப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநராக இருந்த உமா, சுகாதார அமைப்பு திட்ட இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.இவ்வாறு அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>