முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.  தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ெபாறுப்பேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக முதல்கட்டமாக 5 திட்டங்களை நிறைவேற்றுவதற்கான கோப்புகளில்  கையெழுத்திட்டார்.  இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

 மேலும் கூடுதல் படுக்கை வசதிகளை  ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளார்.  இந்நிலையில் தமிழக சட்டமன்ற கூட்டம் வருகிற 11ம் தேதி நடக்கிறது. இதில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொள்கின்றனர். தொடர்ந்து, வரும் 12ம் தேதி சபாநாயகர் தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே, இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள வேண்டும் எனக்கூறி அனைத்து அமைச்சர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் சட்டசபை கூட்டம் தொடர்பாகவும், அதைத்தொடர்ந்து தமிழக பட்ஜெட் 2021-22 தாக்கல் செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும். தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிறைவேற்றுவது  குறித்தும் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். மேலும், இது முதல் அமைச்சரவை கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>