காவல் நிலையத்தில் கத்தியுடன் நுழைந்த போதை ஆசாமிகள்

பெரம்பூர்: கொடுங்கையூர் காவல்நிலையத்தில் 2 நபர்கள் புகார் கொடுக்க நேற்று முன்தினம் இரவு மது போதையில் வந்தனர். அவர்களது இருசக்கர வாகனம் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் உள்ளே நிறுத்தப்பட்டு இருந்தது.  வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே செல்லும்போது அதில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை இடுப்பிலிருந்து எடுத்து இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு காவல் நிலையத்திற்குள் நுழைந்தார். இதை பார்த்த போலீசார் மது போதையில் இருந்த மாதவரம் பச்சையப்பன் தோட்டம் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் ராபர்ட்(43), அவரது மகன் பிலிப் ராய் சீன் டேவிட்(20) ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories:

>