மாநகர செய்தி துளிகள்...

பேட்டரி திருடன் கைது: கொடுங்கையூர், எம்.கே.பி.நகர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களில் பேட்டரி திருடிய காசிமேடு காசிபுரம் பி பிளாக் பகுதியை சேர்ந்த அஜயனை(39) கொடுங்கையூர் போலீசார்  கைது செய்தனர்.

கால்வாயில் மூழ்கி சிறுவன் பலி: உத்தண்டி கிழக்கு கடற்கரை சாலையை சேர்ந்தவர் சுரேஷ்(45). இவரது மனைவி ஷாலினி(40). இவர்களது மகன் சஞ்சய்(11). நேற்று முன்தினம் விளையாட சென்ற சஞ்சய் வெகு நேரமாகியும் வீடு  திரும்பவில்லை. சந்தேகமடைந்த சுரேஷ் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடிப்பார்த்தும் அவனை காணவில்லை. புகாரின்பேரில் கானத்தூர் போலீசார் சஞ்சயை  தேடிவந்தனர். உத்தண்டி பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயில்  சஞ்சய் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆட்டோ கடத்திய மூவர் கைது: கெல்லீஸ் பகுதியை சேர்ந்தவர் வினோத்(30). இவர் தனது ஆட்டோவுடன் கடந்த ஜனவரி 7ம் தேதி அதிகாலை சென்னை மூலக்கடையில் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த 2 பேர் தாம்பரம் செல்ல  வேண்டும் எனக்கூறினர். இதையடுத்து, அவர்களை ஏற்றிகொண்டு, தாம்பரம் நோக்கி சென்றார். புழல் சைக்கிள் ஷாப் மேம்பாலம் அருகே சென்றபோது, அந்த 2 பேர் கத்தியால் வினோத்தை தாக்கி,  அவரிடமிருந்த ஒரு செல்போன், ₹5000  ஆகியவற்றை பறித்துக் கொண்டு, ஆட்டோவுடன் தப்பி சென்றனர். புகாரின்பேரில் புழல் போலீசார் பழைய பல்லாவரத்தை சேர்ந்த ராம்குமார்(28), கொடுங்கையூரை சேர்ந்த ஜாபர்(30), பரங்கிமலையை சேர்ந்த டேவிட் ராஜ்(28) ஆகியோரை கைது  செய்தனர்.

Related Stories:

>