திமுக முன்னாள் எம்எல்ஏ கொரோனாவுக்கு பலி

சென்னை:  திருவொற்றியூரில் திமுக முன்னாள் எம்எல்ஏ கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.திருவொற்றியூர் ஏகவல்லி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் டி.சி.விஜயன்(68). முன்னாள் திமுக எம்எல்ஏவான இவர் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Stories: