குடும்ப தகராறில் மனைவி, மாமனார் அடித்துக்கொலை: மெக்கானிக் கைது

சென்னை: குடும்ப தகராறில் மனைவி மற்றும் மாமனாரை அடித்துகொலை செய்த மெக்காளிக்கை போலீசார் கைது செய்தனர். ராயப்பேட்டை உசேன் தெருவை சேர்ந்தவர் மெக்கானிக் அப்துல் காதர்(42). இவர் ஆட்டோவும் ஓட்டிவந்துள்ளார். முகமது உசேன் தெருவை சேர்ந்தவர் கௌசி நிஷா(52). இவருக்கு ஏற்கனவே திருணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து  வந்துள்ளார். கெளசி நிஷாவை, அப்துல் காதர் இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இதையடுத்து அவர் மீது சந்தேகம் காரணமாக அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததையடுத்து கடந்த நான்கு மாதங்களாக பிரிந்து  வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று மாலை அப்துல் காதர் தனது மனைவி கௌசி நிஷாவின் முதல் கணவருக்கு பிறந்த 21 வயது பெண்ணை கௌசி நிஷா தவறான பாதையில்  அனுப்புவதாக சந்தேகமடைந்து தனது மனைவி மற்றும் மாமனார் முசாபர்  ஆகியோரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம்  ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த அப்துல் காதர் அருகில் இருந்த குக்கர், பீர்பாட்டிலால் தலை மற்றும் முகத்தில் சரமாரியாக இருவரையும் தாக்கியுள்ளார்.  மேலும் வெங்காயம் அறுக்கும் கத்தியை எடுத்து கௌசி நிஷாவின் கழுத்தில் வெட்டியுள்ளார்.  இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலின்பேரில் ஜாம்பஜார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு  செய்து குடிபோதையில் இருந்த அப்துல் காதரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>