பாமக நிறுவனர் ராமதாஸிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பாமக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: பாமக நிறுவனர் ராமதாசை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டதற்காக வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார். நேரில் சந்தித்து வாழ்த்து பெற விரும்பியதாகவும்,  கொரோனா பரவலைக் கருத்தில்  கொண்டு தொலைபேசியில் பேசுவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

தமிழக முதலமைச்சரான தமக்கு ஆலோசனைகளை வழங்கும்படியும் கேட்டுக் கொண்டார். தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலினுக்கு, தமது உளமார்ந்த வாழ்த்துகளை ராமதாஸ் தெரிவித்துக் கொண்டார்.விஜயகாந்த் வாழ்த்து: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தேமுதிக துணை செயலாளர் சுதீஷ், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகர் ஆகியோர் நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது தொலைபேசி மூலம்  விஜயகாந்த்தை தொடர்பு கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரிடம் வாழ்த்து பெற்றார்.

Related Stories:

>