டாஸ்மாக் கடைகள் நேரம் மாற்றம்

சென்னை: டாஸ்மாக் கடைகள் இன்று மாலை 6 மணி வரை செயல்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கில் காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உள்ளிட்டவைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஊரடங்கு  நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்பட்டு வந்தது. இந்தநிலையில், டாஸ்மாக் கடைகள் மே 8, 9ம் தேதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என டாஸ்மாக் நிர்வாகம்  நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து நேற்று டாஸ்மாக் கடைகள் மாலை 6 மணி வரை செயல்பட்டது. இதை தொடர்ந்து, இன்றும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும்.

Related Stories:

>