பலி 10 லட்சம் ஆகாமல் தடுக்க தேசிய ஊரடங்கு அவசியம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசிக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.35,000 கோடியில் மத்திய அரசு ரூ.4,744 கோடி மட்டுமே பயன்படுத்தி இருப்பதாக ஊடகங்களில் வந்த செய்தியை குறிப்பிட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘தடுப்பூசி நிதி பயன்படுத்தவில்லை, மனித உயிர் குறைத்து மதிப்பிடப்படுகிறது, ஏனென்றால் பிரதமரின் ஈகோ அதிகமாக உள்ளது’’ என்றார். கொரோனா தடுப்பூசிக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படுவதை குறிப்பிட்ட ராகுல், ‘‘மக்கள் வாழ்வாதாரம் அழியலாம், ஆனால் பிரதமரின் வரி பறிப்பில் பாதிக்கப்படக் கூடாது’’ என விமர்சித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மகான் அளித்த பேட்டியில், ‘‘ஆகஸ்ட் 1ம் தேதி இந்தியாவில் கொரோனா பலி 10 லட்சத்தை எட்டும் என லான்செட் இதழ் கூறியிருக்கிறது. இது நடக்கக் கூடாது என்றால் நிபுணர்கள் கூறும்படி தேசிய ஊரடங்கை விதிக்க வேண்டும். இனியும் மத்திய அரசு கண்மூடித்தனமாக இருக்கக் கூடாது’’ என்றார்.

Related Stories:

>