வரும் 16ம் தேதி வரை கேரளாவில் முழு ஊரடங்கு

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் நேற்று (8ம் தேதி) முதல் 16ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக மினி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் எந்த பலனும் ஏற்படவில்லை. இதையடுத்து நேற்று (8ம் தேதி) முதல் 16ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி நேற்று காலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. ரயில், விமான போக்குவரத்து தவிர மற்ற பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கப்படும். திருமணம், இறுதி சடங்குகளுக்கு 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் காலை 10 முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும். வாகன ஒர்க்‌ஷாப்புகள் சனி, ஞாயிறு நாட்களில் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களில் பார்சல்கள் மட்டும் வழங்கப்படும். தேவையில்லாமல் வெளியே சென்றால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரித்தனர். அவசர தேவைக்கு வெளியே செல்பவர்கள் போலீசிடம் ஆன்லைனில் அல்லது காவல் நிலையத்துக்கு நேரில் சென்று பாஸ் வாங்கி கொள்ளலாம். கேரளா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்த 25 ஆயிரம் போலீசார் மற்றும் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முழு ஊரடங்கால் கேரளாவில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Related Stories: