ஆக்சிஜன் விநியோகிக்க தேசிய குழு அமைப்பு

புதுடெல்லி: மாநிலங்களுக்கு மருத்துவ ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மருத்துவ ஆக்சிஜனை விஞ்ஞான ரீதியாக ஒதுக்கீடு செய்வதற்கான வழிமுறையை வகுக்க 12 பேர் கொண்ட தேசிய பணிக்குழுவை அமைத்தனர். இந்த குழு மத்திய அரசின் மனித வளங்களை ஆலோசனை மற்றும் தகவல்களுக்காக பயன்படுத்தி, சுதந்திரமாக செயல்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், மத்திய அரசுக்கு தற்போதைய சிக்கல்களுக்கு தற்காலிக தீர்வு காண்பதை தாண்டி, நிரந்தரமான உள்ளீடுகளை வழங்கவும் இந்த குழு உதவும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Related Stories: