சிங்கப்பூரில் தமிழருக்கு கிடைத்த பெருமை

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பார்வையில்லாத முதியவருக்கு உதவிய தமிழக இளைஞர்களுக்கு பாராட்டு மழை பொழிகிறது. தமிழகத்தின் சிவகங்கையை சேர்ந்தவர் குணசேகரன் மணிகண்டன்(26) என்ற இளைஞர் சிங்கப்பூரில் நில அளவை பிரிவில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, பார்வைத்திறன் இல்லாத முதியவர் ஒருவர் சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருப்பதை பார்த்தார் மணிகண்டன். உடனே அவரை கைப்பிடித்து பொறுமையுடன் சாலையை கடக்க உதவினார். பிறகு தன் வேலையை பார்க்க கிளம்பி விட்டார். யாரோ ஒருவர் இதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட, மனிதநேயமிக்க இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டதுடன் எல்லோருக்கும் பரவியது. சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் வீடியோவை பார்வையிட்டு மணிகண்டனின் மனிதாபிமானத்தை பாராட்டினர். வீடியோவை பார்த்த சிங்கப்பூரின் மனித வள அமைச்சர், நெகிழ்ந்து போய் குணசேகரன் வேலை பார்க்குமிடத்துக்கே தேடிச் சென்று பரிசு வழங்கி கவுரவித்துள்ளார்.

Related Stories:

>