முட்டை விலை தொடர்ந்து உயர்கிறது

நாமக்கல்: தமிழகம், கேரளாவில் முட்டை விற்பனை அதிகரித்து வருவதால், நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் உயர்த்தப்பட்டு, 420 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. என்இசிசி சேர்மன் டாக்டர் செல்வராஜ், நேற்று முட்டை விலையில் 25 காசுகள் உயர்த்தியுள்ளார். இதன்படி, ஒரு முட்டையின் விலை 395 காசில் இருந்து 420 காசாக உயர்ந்துள்ளது. ஐதராபாத், பர்வாலா மண்டலங்களில் முட்டை விலை  25 காசு வரை அதிகரித்துள்ளது. மேலும், தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டை விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது. பண்ணையாளர்கள் என்இசிசி அறிவிக்கும் விலைக்கு முட்டைகளை விற்பனை செய்ய வேண்டும். விலை குறைத்து விற்பனை செய்ய வேண்டாம். வரும் வாரங்களில் முட்டை விலை நாடு முழுவதும் அதிகரிக்கும் என என்இசிசி சேர்மன் டாக்டர் செல்ரவாஜ் தெரிவித்து உள்ளார்.

Related Stories: