முதல்வர் ரங்கசாமி பெயரில் போலி டிவிட்டர் கணக்கு

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பெயரில் டிவிட்டர் கணக்கை மர்ம ஆசாமிகள் தொடங்கியுள்ளனர். என்.ரங்கசாமி, புதுச்சேரி முதலமைச்சர், அலுவலக கணக்கு, அகில இந்திய என்ஆர்.காங்கிரஸ் என தொடங்கப்பட்டுள்ளது. இதில் பலரும் பின்தொடர்ந்து வந்தனர். இதுபற்றி அறிந்த என்ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சைபர் கிரைமில் இது குறித்து புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முதல்வர் ரங்கசாமி பெயரிலான போலி டிவிட்டர் கணக்கை முடக்கம் செய்தனர். இது குறித்து என்ஆர்.காங். நிர்வாகி கூறும்போது, இது தொடர்பாக சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>