வேதாரண்யம் அருகே மீனவர் வலையில் ராக்கெட் லாஞ்சர் சிக்கியது

நாகை: நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சிவபெருமாள். இவரது மகன் சபரிநாதன் (37). இவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று அதே பகுதியை சேர்ந்த 4 பேர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் வேதாரண்யத்திற்கு கிழக்கே சுமார் 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது வலையில் ராக்கெட் லாஞ்சர் ஒன்று சிக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பினர். இதகுறித்து கிராம பஞ்சாயத்தார் கொடுத்த தகவலின்பேரில் கீழையூர் கடலோர காவல் குழும போலீசார், ராக்கெட் லாஞ்சரை கைப்பற்றி காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>