சித்திர ரேவதியை முன்னிட்டு ஆண்டாள் அணிவித்த பட்டு வஸ்திரங்கள் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் சென்றன

திருவில்லிபுத்தூர்: சித்திரை ரேவதியை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் ஆண்டாள் அணிவித்த பட்டு வஸ்திரங்கள் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் கொண்டு செல்லப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் ரேவதி நட்சத்திரம் திருச்சி ஸ்ரீரங்கநாதர் பிறந்த தினமாகும். இந்த நட்சத்திரத்தில் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் அணிவித்த பட்டு வஸ்திரங்களை அணிந்து ஸ்ரீரங்கநாதர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். நாளை (மே 9) ஸ்ரீரங்கநாதர் பிறந்த நட்சத்திரமான சித்திரை ரேவதி வருகிறது.

இதையொட்டி ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு அந்த பட்டு வஸ்திரங்கள் திருச்சி கொண்டு செல்லும் வைபவ நிகழ்ச்சி ஆண்டாள் கோயிலில் நேற்று நடைபெற்றது. கொரோனா காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்ட பட்டு வஸ்திரங்கள், கிளி ஆகியவை ஒரு கூடையில் வைத்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த பட்டு வஸ்திரங்களை நாளை கருட சேவை நிகழ்ச்சியின் போது அணிந்து ஸ்ரீரங்கநாதர் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>