புதிய அலுவலகத்தை திறக்க நடவடிக்கை: நெல்லிக்குப்பம் பொதுமக்கள் கோரிக்கை

திருப்போரூர்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த திருப்போரூர் ஒன்றியம், செங்கல்பட்டு வட்டத்துடன் இணைந்திருந்தது. கடந்த 2012ம் ஆண்டு செங்கல்பட்டு வட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு திருப்போரூர் தனி வட்டமாக உருவாக்கப்பட்டது. அப்போது, திருப்போரூரில் கூடுதல் குறு வட்டங்கள் உருவாயின. நெல்லிக்குப்பம் தனி குறு வட்டமாக அறிவிக்கப்பட்டு வருவாய் ஆய்வாளர் நியமிக்கப்பட்டார். அந்த வருவாய் ஆய்வாளருக்கென நெல்லிக்குப்பம் பிரதான கிராமத்தில் கடந்த 2014ம் ஆண்டு குடியிருப்புடன் கூடிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது.புதிய கட்டிடம் கட்டப்பட்டு ஒப்படைக்கப்பட்டாலும் இதுவரை எந்த அதிகாரியும் அந்த கட்டிடத்தை பயன்படுத்தவில்லை.

இதனால் இந்த புதிய கட்டிடம் பயன்படுத்தப்படாமலேயே பாழாகிக்கொண்டிருக்கிறது. நெல்லிக்குப்பம் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் இட நெருக்கடியுடன் கூடிய சிறு கட்டிடத்தை அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார். 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் விஏஓக்கள் மற்றும் பொதுமக்கள் நெல்லிக் குப்பம் வருவாய் ஆய்வாளரை சந்திக்கும்போது பழைய அலுவலகம் போதுமானதாக இல்லை. தனி அலுவலகம், பொது மக்கள் அமரும் இடம், வருவாய் ஆய்வாளருக்கான இல்லம் என அனைத்து வசதிகளுடன் உள்ள கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டு மென அப்பகுதியினர் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.

Related Stories: