ஊரடங்கை காரணம் காட்டி தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..! தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்தால் ரூ.10,000 வரை அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. முழு ஊரடங்கின் போது அனைத்து போக்குவரத்து சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகள், ரயில்கள், ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட ஏதும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு போக்குவரத்து சேவை இயங்காது என்பதால், வெளியிடங்களில் தங்கி இருப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இன்றும் நாளையும் போக்குவரத்து சேவைக்கு முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பேருந்துகள் 24 மணி நேரமும் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, சென்னையில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்துள்ளனர். தனியார் பேருந்துகளிலும், அரசு பேருந்துகளிலும் பயணிகள் குவிகின்றனர்.

அரசு பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் தான் என்றாலும், இந்த இக்கட்டான சூழலை பயன்படுத்தி தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலைக்கும், தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனியார் ஆம்னி பேருந்துகள் பேரிடர் காலத்தில் மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டுமென்றும் முறையான கட்டணம் வசூலித்து வாகனங்களை இயக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>