கடலூரில் கொரோனாவால் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய ஊர்மக்கள் எதிர்ப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொரோனாவால் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொழுதூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஒரு வாரத்திற்கு முன் பெரம்பலூர் தனியார் மருத்துவமனைக்கு 3 பேரும், 2 பேர் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி மணி என்ற முதியவர் உயிரிழந்தார். அவரது உடலை சொந்த ஊருக்கு அடக்கம் செய்ய கொண்டு வருவதாக தகவல் அறிந்த கிராமமக்கள் மயானத்திற்கு செல்லும் பாதையை வேலி வைத்து அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த ராமநத்தம் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பலனாக மாற்று வழியில் உடல் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories:

>