ஆந்திர மாநிலம் கடப்பாவில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததில் 10 பேர் பலி

கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் கல் குவாரியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். கடப்பா மாவட்டத்தில் உள்ள மாமிலப்பள்ளி என்ற கிராமத்தில் தான் இந்த விபத்தானது நடந்துள்ளது. தனியாருக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கும் குவாரி இருக்கிறது. சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கும் பணியில் பயன்படுத்துவதற்காக வெளியூரில் இருந்து ஜெலட்டின் குச்சிஎ களை வரவழைப்பது வழக்கம். அந்த வகையில் இன்றும் ஜெலட்டின் குச்சிகள் வரவழைக்கப்பட்டு லாரியில் இருந்து இறக்கப்பட்டன.

அப்போது எதிர்பாராதவிதமாக ஜெலட்டின் குச்சி ஒன்று வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த வின் பத்தினால் ஏராளமான அளவில் ஜெலட்டின் குச்சிகள் தொடர்ந்து வெடித்து கொண்டிருந்ததில் அந்த பகுதி முஅப்போது ழுவதுமாக புகை மண்டலமாக காட்சியளித்தது. அப்போது அந்த ஜெலட்டின் குச்சிகளை இறக்கி கொண்டிருந்த போது உடல் சிதறி தொழிலாளர்கள் 10திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் சிலர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.

உடனடியாக தகவல் அறிந்த தீயணைப்பு துறையினரும் காவல் துறையினரும் தற்போது படுகாயம் அடைந்திருப்பவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்விற்காக அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விபத்து பற்றி தகவல் அறிந்த கடப்பா மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் தற்போது காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதுமட்டுமின்றி அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இந்த விபத்தில் படுகாயம் அடைந்திருப்பவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டிருக்கிறார்.

Related Stories:

>