சென்னை பெருநகர புதிய காவல் ஆணையராக சங்கர் ஜிவால் பொறுப்பேற்பு

சென்னை: சென்னை பெருநகர புதிய காவல் ஆணையராக சங்கர் ஜிவால் பொறுப்பேற்றுக்கொண்டார். மாநிலத்தில் புதிய அரசு பதவியேற்றுக் கொண்ட நிலையில் மூன்று முக்கிய காவல் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. அதில் சென்னை ஆணையராக இருந்த மகேஷ்குமார் அகர்வாலை மாற்றம் செய்து சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டிருந்தார். அதன்படி இன்று முறைப்படி சங்கர் அகர்வால் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்கர் ஜிவால், சென்னையில் கட்டப்பஞ்சாயத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்டவற்றை தடுக்க முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்தார். கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>