பெண்களைப் போலவே திருநங்கையரும் பேருந்தில் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை : பெண்களைப் போலவே திருநங்கையரும் பேருந்தில் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக தேர்தல் அறிக்கையில்், ஆட்சி அமைந்த உடன் சாதாரண கட்டணம் உள்ள அரசு பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என உறுதியளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின், சாதாரண கட்டண நகர் பேருந்துகளில்  பெண்களில் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் கோப்பில் நேற்று கையெழுத்திட்டார்.

இந்த உத்தரவு உடனடியாக இன்று காலை முதலே தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது. இதையடுத்து நேற்று ‘‘மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை’’ என்ற ஸ்டிக்கர்கள் ஆங்காங்கே அச்சடிக்கபட்டு, நகர் பேருந்துகளின் முன்புற கண்ணாடியில் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் ஒட்டப்பட்டன. இன்று அதிகாலை முதலே இயக்கப்பட்ட பெரும்பாலான பஸ்களில், பெண்கள் கட்டணமின்றி தாங்கள் விரும்பிய இடத்திற்கு சென்றனர்.

இதை தொடர்ந்து இந்துஜா ரகுநாதன், ” பெண்களுடன் திருநங்கைகளுக்கும் இலவச பஸ் பயண திட்டத்தை அறிவித்தால் நன்றாக இருக்கும் ” என்று ஸ்டாலினை டேக் செய்து ட்வீட் போட்டுள்ளார்.இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “மகளிர் நலன் – உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கலைஞர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம். தாங்கள் அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி. பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: