2வது அலையின் கோர தாண்டவம்: இந்தியாவில் ஒரே நாளில் 4,01,078 பேருக்கு கொரோனா... 4,187 பேர் உயிரிழப்பு !

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 4,187 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 4,01,078 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை  2,18,92,676 ஆக உயர்ந்தது.

* புதிதாக 4,187 பேர் உயிரிழந்துள்ளனர்.

* இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,38,270 ஆக உயர்ந்துள்ளது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,18,609 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை  1,79,30,960 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  37,23,446 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சதவிகிதம் 81.98% ஆக அதிகரித்துள்ளது.

* கொரோனாவால் உயிரிழந்தோர் சதவிகிதம் 1.09% ஆக அதிகரித்துள்ளது.

* கொரோனாவால் சிகிச்சை பெறுவோர் சதவிகிதம் 17.01% ஆக அதிகரித்துள்ளது.

* இதன் மூலம், நாட்டின் இதுவரை 16,73,46,544 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Stories: