இனி தமிழகம் வெல்லும் என பேஸ்புக், டிவிட்டரில் முகப்பு பக்கத்தை மாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின், தனது பேஸ்புக், டிவிட்டரில் இனித் தமிழகம் வெல்லும் என்று தனது முகப்பு பக்கத்தை மாற்றியுள்ளார்.  தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியைப் பிடித்தது. ‘இனித் தமிழகம் வெல்லும், அதை நாளைய தமிழகம் சொல்லும்’ என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.  தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து, தலைமைச் செயலகம் சென்ற மு.க.ஸ்டாலின், 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்து போட்டார். தமிழக முதல்வராக பதவியேற்ற உடன் மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக், டிவிட்டர் பக்கத்தில் முகப்புப் பக்கம் தமிழக முதலமைச்சர், திமுக தலைவர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  ‘இனித் தமிழகம் வெல்லும்’ எனவும் முகப்புப் பக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றி வைத்துள்ளார். இதன் பின் பகுதியில் மு.க.ஸ்டாலின் ஆற்றிய மக்கள் நலப் பணிகள் தொடர்பான புகைப்படத் தொகுப்பு உள்ளது.

Related Stories:

>