காதர்மொகிதீன் அறிக்கைவரலாறு காணாத அற்புதங்களை படைத்திடும் இந்த நல்லாட்சி

சென்னை: இந்திய  யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொகிதீன் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆறாவது முறையாக தி.மு.க. ஆட்சி மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது. இந்த நல்லாட்சி தொடர்ந்து இதுவரை வரலாறு காணாத அற்புதங்களை படைத்திட வாழ்த்துவோம். தமிழகத்தில் உள்ள எல்லா சமூகத்தின் பிரதிநிதிகளும் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது முதலமைச்சரின் சமூகப் பார்வை மிகவும் தெளிவானது என்பதை நிரூபித்திருக்கிறது. தமிழக அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதியே இல்லாமல் இருந்த காலமும் இருந்தது. கர்மவீரர் காமராஜர் காலத்தில்தான் முஸ்லிம் அமைச்சர் வரலாறு துவங்கியது. அதற்குப் பின்னர் பேரறிஞர் அண்ணா காலத்தில் இந்த வரலாறு சிறப்பாக தொடர்ந்தது.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் காலத்தில் முஸ்லிம் இருவருக்கு அமைச்சர் பதவி தந்து புதிய வரலாற்றை உருவாக்கினார். தந்தையின் வழியில் தப்பாமல் செல்லும் தனயன் என்னும் பேர் பெற்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு முஸ்லிம்களுக்கு தனது அமைச்சரவையில் இடமளித்துள்ளது தமிழக முஸ்லிம் சமுதாய மக்களின் ஒட்டுமொத்த வரவேற்புகளை பெற்றுள்ளது.

Related Stories:

>