கொரோனா பரவலை தடுக்க மதுக்கடைகளை மூட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா பரவலை தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பட்டியலிட்டால் அதில் முதலிடம் அளிக்கப்பட வேண்டியது மதுக்கடைகளை மூடும் முடிவுக்குதான். காரணம், கொரோனா வைரஸ் பரவுவதற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்று மது ஆகும். மதுக்கடைகளில் மது வாங்குவதற்காக கூட்டம் முண்டியடிக்கும் போது, அந்தக் கூட்டத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தால், அது அங்கு நெருக்கமாக இருக்கும் அனைவருக்கும் எளிதாக பரவி விடும். அதுமட்டுமின்றி, மது அருந்தும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் கொரோனா வைரஸ் மிகவும் எளிதாக தாக்கி விடும் என்பதால், மது குடிப்பதை தடை செய்ய வேண்டும் என்று உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கிறது. எனவே மதுக்கடைகளை மூட ஆணையிட வேண்டும்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: