தமிழகத்துக்கு சேவை செய்திட வாய்ப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை. தமிழகத்துக்கு சேவை செய்திட வாய்ப்பு வழங்கிய தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:  ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி இன்று தமிழகத்தின் முதல்வராக  பொறுப்பேற்றுக் கொண்டேன். காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின், திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>