தனக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் நன்றி: புதுவை முதல்வருக்கு வாழ்த்து

சென்னை: புதுவை முதல்வராக பொறுப்பேற்றுள்ள முதல்வர் என்.ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தனக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டர் பதிவின் வழியாக வாழ்த்து தெரிவித்திருந்தார். அவருக்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளுக்கு நன்றி’’ என்று கூறியுள்ளார். அதேபோன்று, ‘‘புதுச்சேரியின் முதல்வராக பதவியேற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்.ரங்கசாமிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

அவரது அரசு, புதுச்சேரி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் நல்லரசாக திகழ்ந்து, மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் வழிவகுக்கட்டும்’’ என்று கூறியுள்ளார்.  மற்றொரு டிவிட்டர் பதிவில், முதல்வராக பொறுப்பேற்றதும், கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் திருவுருவப்படத்திற்கும், தொடர்ந்து அண்ணா, கலைஞர், பெரியார் நினைவிடங்களிலும் மரியாதை செலுத்தினேன். பேராசிரியர் இல்லத்தில் அவரது திருவுருவப்படத்திற்கும், கலைஞரது சிஐடி காலனி இல்லத்திற்கும் சென்று மரியாதை செலுத்தினேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>