சிவகாசி அருகே இடி, மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் தீ

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கீழபெத்தலுபட்டியில் சண்முகநாதன் என்பவருக்கு சொந்தமான கம்பி மத்தாப்பு தயாரிக்கும் ஆலை  கிடங்கு உள்ளது. சிவகாசி பகுதியில் நேற்று நண்பகல் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது எதிர்பாராவிதமாக கம்பி மத்தாப்பு ஆலை கிடங்கில் மின்னல் தாக்கி தீ விபத்து ஏற்பட்டது. இதில் அறையில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள கம்பி மத்தாப்புகள் எரிந்தது சாம்பலானது. கட்டிடமும் சேதமடைந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. சிவகாசி தீயணைப்பு வீர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் தொழிலாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>