சென்னையில் கொரோனா பாதிப்பு 23.6% அதிகரிப்பு: நூறு நபர்களில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு 23.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் நூறு நபர்களில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதாக மாநகராட்சி மற்றும் சுகாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 12,97,500பேர் பாதிக்கப்பட்டு 14,974 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சென்னையிலும் 3,70,596 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 3,32,259 சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும் சிகிச்சை பலனின்றி 4,952 உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ெசன்னையில் ஒருநாள் பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்த நிலையில், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் விகிதம் 23.6% ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூறு நபர்களில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.  நேற்று முன்தினம் மட்டும் 6,678 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 69 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். எனவே ஆரம்ப சிகிச்சைக்கு பொதுமக்கள் கோவிட் பராமரிப்பு மையங்களை பயன்படுத்துமாறு அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சாதாரண அறிகுறிகள் என்றால் அப்பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். மேலும் வீட்டில் தனிமைப்படுத்தும் வகையில் இடவசதி இருந்தால் வீட்டில் தனிமைப்படுத்துக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: