முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றியதாக தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 55.31 லட்சம் அபராதம் வசூல்: காவல்துறை நடவடிக்கை

சென்னை: தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் சுற்றிவந்ததாக நேற்று ஒரே நாளில் மட்டும் 27 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு ெசய்து அபராதமாக போலீசார் ரூ.55.31 லட்சம் வசூலித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றி வரும் நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத நபர்கள் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகிறது.

அந்த வகையில், தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் முகக்கவசம் அணியாமல் சுற்றியதாக வடக்கு மண்டலத்தில் 5,060 பேர் மீதும், மத்திய மண்டலத்தில் 2,855 பேர் மீதும், மேற்கு மண்டலத்தில் 4,933 பேர் மீதும், தெற்கு மண்டலத்தில் 8,007 பேர் மீதும், நகர் புறங்களில் 5,085 பேர் மீதும், சென்னை மாநகரில் 1,718 என மொத்தம் 27,658 பேர் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு ெசய்துள்ளனர். மேலும் அவர்களிடம் அபராதமாக ரூ.55 லட்சத்து 31 ஆயிரத்து 400 வசூலித்துள்ளனர்.

Related Stories: