கர்நாடகாவில் மே 10 முதல் முழு ஊரடங்கு: கோவாவில் 15 நாள் லாக்டவுன்

பெங்களூரு: கர்நாடகாவில் வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் கோவா மாநிலததில் 15 நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தபோதும், கொரோனா தொற்று பரவல் குறையவில்லை. நேற்று ஒரே நாளில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 592 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூருவில் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் பீதி

அடைந்துள்ளனர். இதையடுத்து,  முழு ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, வரும் 10ம் தேதி  காலை 6 மணி முதல் மே 24 அதிகாலை 6 மணிவரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அம்மாநில தலைமை செயலாளர் அறிவித்துள்ளார். ஏற்கனவே பயணம்  நிர்ணயிக்கப்பட்ட விமானம், ரயில் சேவை மட்டும் இயக்கப்படும்.  மெட்ரோ ரயில்கள் இயங்காது, அதே நேரம்  ஆட்டோ, டாக்சி உள்ளிட்டவை அவசர பணிகள் என்றால் இயங்க அனுமதி  அளிக்கப்படுகிறது. ஓட்டல்களில் உணவு பொருட்களை நடந்து சென்று தான் பார்சல் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அனைத்து  சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், உடற்பயிற்சி மையங்கள், மத  வழிபாட்டு தலங்கள், பார்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் தடை  விதிக்கப்படுகிறது. அரசு அலுவலகங்கள் அனைத்தும் விதிகளின்படி செயல்படும்.  பொது  போக்குவரத்து பஸ்கள், தனியார் பஸ்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்டை  மாநிலத்திற்கு செல்லும் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.  காலை 6 மணி முதல் பகல் 10 மணி வரை காய்கறி, மளிகை மற்றும் மது கடைகள்,  திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுகிறது.  காய்கறிகள், பழங்கள் தள்ளுவண்டிகளில் காலை 6 மணி முதல் இரவு 6  மணி வரை விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவா: கோவாவில் தினசரி தொற்று கடந்த வியாழனன்று 3,689 ஆகவும், உயிரிழப்பு 58 ஆகவும் உயர்ந்தது. இதனால் 15 நாட்களுக்கு ஊரடங்கை கோவா அரசு அறிவித்துள்ளது. மே 9 முதல் தொடங்கும் இந்த ஊரடங்கில் கடைகளுக்கு மதியம் 1 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளுக்கு அனுமதியளிக்கப்

பட்டுள்ளது.

Related Stories: