புதிய தனியுரிமை கொள்கை: பணிந்தது வாட்ஸ் அப்: ஏற்றுக்கொள்ள விதித்த கெடு வாபஸ்

புதுடெல்லி: உலகளவில் பல கோடி மக்கள் பயன்படுத்ததும் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. தனிநபர் பாதுகாப்பு என்ற பெயரில் சமீபத்தில் அது வரிசையாக கொண்டு வந்துள்ள பல புதிய விதிமுறைகளால், அதை பயன்படுத்தும் பயனாளர்கள் மிகுந்த சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். வாட்ஸ்அப்பின் புதிய விதிமுறைகளின்படி, பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்ற நிறுவனங்களுடன் பகிரப்படும். இந்த விதிமுறையை ஏற்றுக் கொண்டதாக வாடஸ்அப்புக்கு ‘ஓகே’ போட்டாமல் மட்டுமே, அதன் சேவையை தொடர்ந்து பயன்படுத்த முடியும். இல்லாவிட்டால், கணக்கு முடக்கப்படும் என்று கடந்த ஜனவரி மாதம் வாட்ஸ் அப் நிறுவனம் அறவித்தது.  எனவே, பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தற்போது வாட்ஸ்அப் பயன்படுத்துவதற்கு மாற்றாக டெலிகிராம், சிக்னல் போன்ற ஆப்களுக்கு மாறத் தொடங்கினர்.

இதையடுத்து, புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள மே மாதம் 15ம் தேதி கடைசி நாள் என்று வாட்ஸ் அப் நிறுவனம் சற்று இறங்கிவந்தது. இந்நிலையில், பயனாளர்களின் கடும் எதிர்ப்புக்கு பணிந்து கெடுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அந்நிறுவனம் நேற்று அறிவித்தது. விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், வாட்ஸ் அப்பின் கணக்கை அகற்ற மாட்டோம் என்று அந் நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Stories:

>