யுஇஎப்ஏ ஐரோப்பா லீக் பைனலில் மான்செஸ்டர் யுனைடட்: வில்லார்ரியலும் முன்னேறியது

ரோம்: யுஇஎப்ஏ ஐரோப்பா லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட மான்செஸ்டர் யுனைடட்-வில்லார்ரியல் அணிகள் தகுதிப் பெற்றுள்ளன. ஐரோப்பிய சாம்பியன் லீக் போட்டியை போன்று நடைபெறும் கால் பந்து தொடரான யுஇஎப்ஏ ஐரோப்பா லீக்  இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஐரோப்பியாவின் முன்னணி கால்பந்து கிளப்கள் மோதும் இந்தப்போட்டியின் அரையிறுதிப்போட்டிகள் நேற்று முடிந்தன. இத்தாலியின் ரோம் நகரில் நடந்த அரையிறுதியின் 2வது சுற்றின் கடைசி ஆட்டத்தில் நேற்று  ரோமா(இத்தாலி)-மான்செஸ்டர் யுனைடட்(இங்கிலாந்து) அணிகள் மோதின. முதல் சுற்றில் தோற்று தோற்றதால் அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ரோமா அணி இருந்தது. அதனால் ஆரம்பம் முதலே தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. அதன் வீரர்கள் அடிக்கடி மான்செஸ்டர் யுனைடட் கோல் பகுதியை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர்.

ஆனால் மான்செஸ்டர் அணியின் எடின்சன் காவனி 39வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார்.  அதனால் முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் முன்னிலை பெற்றது.அதனால் 2வது பாதியில் ேராமா வீரர்கள் கூடுதல் வேகம் காட்டினர். அதன் பலனாக ரோமா அணியின்  எடின் டிசேகோ 57வது நிமிடத்திலும்,  பிரயன் கிறிஸ்டினேட் 60நிமிடத்திலும் அடுத்தது கோல் அடித்தனர். அதனால் ரோமா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைக்கு வந்தது. அந்த முன்னிலை சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. மான்செஸ்டர் வீரர் எடின்சன் 68வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடிக்க, இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலைக்கு வந்தன. அதன்பிறகு முன்னிலை பெற இரு அணிகளும் மல்லுக்கட்ட ஆட்டத்தில் அனல் பறந்தது. ஆனாலும் ஆட்டம் டிராவில் முடியும் என்ற சூழல் இருந்தது. ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் ரோமா வீரர் கோல் அடிக்க முயல, பந்து மான்செஸ்டர் வீரர் அலெக்ஸ் டெல்லஸ் காலில்பட்டு கோலுக்குள் விழுந்தது. அலெக்சின் சுய கோலால் ரோமா 3-2 என்ற முன்னிலை கடைசி வரை நீடித்தது. அதனால் ேராமா வெற்றி வெற்றது.

ஏற்கனவே நடந்த முதல் சுற்றில் மான்செஸ்டர் யுனைடட் 6-2 என்ற கோல் கணக்கில் ரோமாை வீழ்த்தியிருந்தது. அதனால் மான்செஸ்டர் மொத்தமாக  8-5என்ற கோல் கணக்கில் இறுதிப்போட்டியை உறுதி ெசய்தது.அதேபோல் இங்கிலாந்தின் லண்டன் நகரில்  நேற்று நடந்த மற்றொரு அரையிறுதி 2வது சுறறில்  ஆர்செனல்(இங்கிலாந்து)-வில்லார்ரியல்(ஸ்பெயின்) அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த ஆட்டம் ேகா லின்றி டிரா வில் முடிந்தது. இந்த அணிகள் ஏற்னவே மோதிய முதல் சுற்றில் வில்லார்ரியல் 2-1 என்ற கணக்கில் வென்றிருந்தது. அதனடிப்படையில் வில்லார்ரியல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. போலாந்தின் டன்செக் நகரில் மே 27ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் வில்லார்ரியல்-மான்செஸ்டர் யுனைடட் அணிகள் மோத உள்ளன.

Related Stories:

>