குண்டுவெடிப்பில் படுகாயம் மாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்லமுயற்சி

மாலே: மாலத்தீவின் முன்னாள் அதிபரும் தற்போதைய சபாநாயகருமான முகமது நஷீத் கடந்த வியாழக்கிழமை இரவில் தனது வீட்டுக்கு வெளியே நின்றிருந்த வாகனத்தில் ஏறுவதற்காக வெளியே வந்தார். அப்போது அவரது வாகனத்துக்கு அருகே குண்டு வெடித்தது. இந்த விபத்தில் முகமது நஷீத் படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ‘இது ஒரு கோழைத்தனமான தாக்குதல்’ மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது கண்டனம் தெரிவித்துள்ளார். முகமது நஷீத் விரைவில் குணமடைய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வாழ்த்து கூறியுள்ளார்.

Related Stories:

>