கொரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை விலக்கு ஜெர்மனி எதிர்ப்பு

ஜெனிவா: உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார் சொத்துரிமை விதிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் நாட்டின் ஜெனீவா நகரில் உலக வர்த்தக அமைப்பின் பொதுச்சபை கூட்டம் இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் அறிவு சார் சொத்து விதிகளில் இருந்து கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை விலக்கி வைக்க வேண்டும் என்ற இந்தியா உள்ளிட்ட நாடுகளின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்காவும் தனது ஆதரவை தெரிவித்தது. உலக வர்த்தக அமைப்பின் 100க்கும் மேற்பட்ட உறுப்புநாடுகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

எனினும் காப்புரிமை விலக்கு அளிக்க கூடாது என ஜெர்மனி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார் சொத்துக்கள் குழு அடுத்த மாதம் கூறி இது குறித்து முடிவு எடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தடுப்பூசிக்கு காப்புரிமை விலக்கு அளித்து ஒப்புதல் வழங்கினால் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிப்பதற்கு ஏதுவாக அமையும்.  பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசி கிடைக்கவும் வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: