அதிமுகவில் கோஷ்டி பூசல்; எதிர்கட்சித் தலைவர் பதவி வேண்டும் என ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே வாக்குவாதம்: கூட்டம் ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு ஏதும் எட்டப்படாததால் வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக நிர்வாகிகள் இடையே நீண்ட நேரம் விவாதம் நீடித்த நிலையில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.  திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்எஎல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். எதிர்கட்சித் தலைவர் பதவி வேண்டும் என்று ஓபிஎஸ் பிடிவாதம் செய்து வருவதாக கூறப்படுகிறது. எடப்பாடி தரப்பில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்ட தாம் தான் ஆகவே எதிர்கட்சி தலைவர் பதவி எனக்கு தான் என கூறியதாகவும் கூறப்படுகிறது. இந்த பதவியை கைப்பற்ற இபிஎஸ், ஓபிஎஸ் இடையே  கடும் போட்டி நிலவி வருகிறது. அதிமுக கூட்டணி தமிழகத்தில் 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

இதில் அதிமுக வேட்பாளர்கள் மட்டும் 65 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்  பதவியை பிடிப்பதற்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கடும் போட்டி ஏற்பட்டு வருகிறது.  இந்த பரபரப்பான சூழ்நிலையில் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.  கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். இந்த கூட்டத்திற்கு, அதிமுக சார்பில் வெற்றிபெற்ற 65 எம்எல்ஏக்களும் பங்கேற்க  வேண்டும் என்று அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: