கேரளாவில் இடதுசாரி கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் புதிய அமைச்சரவை 20ல் பதவியேற்பு

திருவனந்தபுரம்:  கேரளாவில் இடது முன்னணி அமைச்சரவை வரும் 20ம் தேதி பதவி ஏற்கவுள்ளது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி 99 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். இடதுசாரி கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், இந்த வாரமே பதவி ஏற்பு விழா நடக்கும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேரளாவில் கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால், 2 வாரங்களுக்கு பின்னரே பதவியேற்பு விழா நடக்கும் என தகவல்கள் வெளியாயின.

இதற்கிடையே கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகளிடையே, அமைச்சர்களை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் கடந்த சில தினங்களாக நடந்து வந்தன. அமைச்சரவையில் புதுமுகங்களுக்கும், பெண்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் வரும் 20ம் தேதி புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories: