தமிழக அமைச்சரவையில் நீர்பாசனத்துறைக்கு தனி அமைச்சகம்!: காவிரி டெல்டா மாவட்ட மக்கள் வரவேற்பு..!!

தஞ்சை: தமிழக அமைச்சரவையில் நீர்பாசனத்துறைக்கு என தனி அமைச்சகம் அமைக்கப்பட்டிருப்பதற்கு தஞ்சை மாவட்ட மக்கள் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் புதிய அமைச்சரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று பதவியேற்றது. கிண்டி ராஜ்பவனில் எளிமையான முறையில் இந்த பதவியேற்பு விழா நடந்தது. தொடர்ந்து, முதல்வருடன் மேலும் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றுள்ள நிலையில், அதில் நீர்பாசனத்துறைக்கு தனி அமைச்சகம் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் நீர்பாசனத்துறைக்கு தனி அமைச்சகம் அமைக்கப்பட்டிருப்பதற்கு காவிரி டெல்டா மாவட்ட மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.  இதனால் தங்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளதாகவும், அண்டை மாநிலங்களுடன் தமிழகத்தின் நதிநீர் பங்கீடு பிரச்சனைகள் தீர இதன் மூலம் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தஞ்சை மாவட்ட மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை பொதுப்பணித்துறையின் கீழ் நீர்பாசன திட்டங்கள் செயல்பட்டு வந்த நிலையில், இனிமேல் நீர்பாசனத்துறைக்கு தனி அமைச்சகமாக செயல்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: