கொரோனா ஊடரங்கை மீறிய டிஎஸ்பி மகன், வளர்ப்பு நாய் கைது

இந்தூர்: கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீஸ் டிஎஸ்பியின மகன் மற்றும் அவரது வளர்ப்பு நாயை போலீசார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர். மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் அடுத்த மனோரம்கஞ்சில், கொரோனா  ஊரடங்கு அமலில் உள்ளதால், போலீசார் மற்றும் பிற துறை அதிகாரிகள் குழு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, அல்சுபா போலீஸ் டிஎஸ்பியின் மகன் அனிஷ் நட்டா என்பவர், தனது வளர்ப்பு நாய் டோகி ஜுஜுவுடன் தடை உத்தரவை மீறி வெளியே சுற்றிக் கொண்டிருந்தார். அதை பார்த்த போலீசார், கொரோனா  ஊரடங்கு உத்தரவு மீறி பொதுவௌியில் சுற்றித் திரிவதற்காக அனிஷ் நாடாவை கண்டித்தனர்.

அதற்கு அவர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததால், அனிஷ் நாடாவை பாலாசியா போலீசார் கைது செய்தனர். பின்னர், அனிஷ் நட்டா அழைத்து சென்ற டோகி  ஜுஜு என்ற நாயையும் கைது செய்தனர். பின்னர் அனிஷ் நட்டா மற்றும் நாயையும் தற்காலிக சிறைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கொரோனா ஊரடங்கு விதிகளை மீறிய அனிஷ் நட்டாவையும், அவர் அழைத்து வந்த நாயையும் கைது செய்தோம். ஆனால், அவர்கள் அடுத்த சில மணி நேரங்களில் விடுவிக்கப்பட்டனர்’ என்றனர்.

Related Stories: