தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் 4 பேர் நியமனம்!!

சென்னை : தமிழக முதலமைச்சரின் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் 12வது முதல்வராக திமுக தலைவர் மு..க. ஸ்டாலின் இன்று பதவி ஏற்றார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக முதல்வர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவரை தொடர்ந்து 33 அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக பதவி ஏற்றுக்கொண்டனர் சென்னை  பதவியேற்பு விழாவை அடுத்து அண்ணா ,கருணாநிதி நினைவிடம், கோபாலபுரம் இல்லம் என சென்று வந்த ஸ்டாலின் தலைமை செயலகத்துக்கு விரைந்து முதல் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இந்நிலையில் முதல்வரின் முதன்மை செயலாளர் அந்தஸ்தில் உள்ள உதயசந்திரன் ஐஏஎஸ் முதல்வரின் முதலாவது செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  அதேபோல் உமாநாத் ஐஏஎஸ், எம்.எஸ். சண்முகம் ஐஏஎஸ், அனு ஜார்ஜ் ஐஏஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதிஷ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முதன்மைச் செயலாளராக உதயசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக ஆட்சியில், தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலாளராக பணியாற்றியவர் இவர். ஒரு கட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை விடவும் அதிகமாக பாராட்டுகளை பெறத் தொடங்கியிருந்தார்.

உமாநாத் ஏற்கனவே கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர். மாவட்ட நிர்வாகத்தில் நிறைய சீரமைப்பு செய்து பெயர்பெற்றார். தமிழக மருத்துவ கொள்முதல் பிரிவில் உமாநாத் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

எம்.எஸ்.சண்முகம் 2002 ஐஆர்எஸ் பேட்ஜ் அதிகாரி. அருங்காட்சியக ஆணையராக பதவி வகித்து வருகிறார். பாரத் டெண்டர் பிரச்சினை வந்தபோது நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் அழுத்தம் கொடுத்தார். பாரத் டெண்டர் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட மறுத்தார். இதன் காரணமாகத்தான் அவர் அருங்காட்சியகம் துறைக்கு தூக்கி அடிக்கப்பட்டார் என்று விமர்சனங்கள் உண்டு . அவரைத் தேர்ந்தெடுத்து ஸ்டாலின் தனது பக்கத்தில் கொண்டு வந்து அமர்த்தியுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரி அனு ஜார்ஜ், தொழில்துறை கமிஷனராக பதவி வகித்தார். தொழில் மற்றும் வணிக இயக்குனராகவும் பணியாற்றி வந்தார் . அவர் முதல்வரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: