இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 150 பேர் பலி.. 15 நாட்கள் முழு ஊரடங்கினால் 1 லட்சம் உயிரிழப்புகளை தடுக்கலாம்!!

டெல்லி: இந்தியாவில்  ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 150 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 10 நாட்களாக இந்தியாவில் தினமும் 3,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம், இந்தியா உலகெங்கிலும் உள்ள எந்த நாட்டைவிடவும், தொடர்ச்சியாக 10 நாட்களில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைப் பதிவு செய்த நாடாக மாறியுள்ளது. இதற்கு முன்னர்,

அமெரிக்கா 10 நாட்களில் 34,798 மற்றும் பிரேசில் 32,692 இறப்புகளைப் பதிவு செய்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை குறைவாக இருப்பதாக இதுவரை நம்பப்பட்டது. ஆனால் நிலைமை வேறு மாதிரி இருக்கிறது. இந்த நிலையில், 15 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தினால் 1 லட்சம் பேர் உயிரிழப்பதை தடுக்க முடியும் என்றும் போதிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் தொற்று பாதிப்பில் அமெரிக்காவை இந்தியா மிஞ்சிவிடும் என்றும் இந்திய அறிவியல் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: