இனித் தமிழகம் வெல்லும்... தமிழக முதலமைச்சர், திமுக தலைவர்... மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் முகப்புப் பக்கம் மாற்றம்!!

சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மு.க.ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து 33 தமிழக அமைச்சர்களும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் முதன்முதலாக தனது கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார் மு.க.ஸ்டாலின். அங்கிருந்த அவரின் தந்தை கலைஞர் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி கண்கலங்கிய நிலையில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்தில் இருந்த தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனதை தொடர்ந்து அவரது டுவிட்டர் பக்கத்தின் முகமும் மாறியிருக்கிறது. மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் முகப்புப் பக்கம் தமிழக முதலமைச்சர், திமுக தலைவர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இனித் தமிழகம் வெல்லும் எனவும் ட்விட்டரில் முகப்புப் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வைத்துள்ளார்.

Related Stories:

>