தமிழகத்தில் மேலும் 24,898 பேருக்கு கொரோனா தொற்று 21,546 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூன்று ஆயிரத்தில் தொடங்கி இரண்டு மடங்குகளாக அதிகரித்து வருகிறது. சென்னையிலும் கொரோனா பாதிப்பு மற்ற மாவட்டங்களை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரேநாளில் 24,898 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 21,546 பேர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுகுறித்து, மாநில சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,52,130 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 24,898 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நேற்று சென்னையில் மட்டும் 6,678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,97,500 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 14,683 பேர் ஆண்கள், 10,215 பேர் பெண்கள். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 21,546 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,31,468 ஆக உள்ளது. மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 195 பேர் நேற்று உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 69 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 81 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 114 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவர்கள். மொத்தம் 14,974 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய மொத்த பாதிப்பில் செங்கல்பட்டு- 2,039 பேர், கோவை- 2,068 பேர், கடலூர்- 366 பேர், தர்மபுரி- 230 பேர், திண்டுக்கல்- 307 பேர், ஈரோடு- 590 பேர், கள்ளக்குறிச்சி- 175 பேர், காஞ்சிபுரம்- 836 பேர், கன்னியாகுமரி- 445 பேர், கரூர்- 229 பேர், கிருஷ்ணகிரி- 390 பேர், மதுரை- 996 பேர், நாகப்பட்டினம்- 333 பேர், நாமக்கல்- 322 பேர், நீலகிரி- 113 பேர்,  புதுக்கோட்டை- 182 பேர், ராமநாதபுரம்- 180 பேர், ராணிப்பேட்டை- 275 பேர், சேலம்- 614 பேர், சிவகங்கை-148 பேர், தென்காசி- 280 பேர், தஞ்சாவூர்- 165 பேர், தேனி- 456 பேர், திருப்பத்தூர்- 176 பேர், திருவள்ளூர்- 1,560 பேர், திருவண்ணாமலை- 304 பேர், திருவாரூர்- 269 பேர், தூத்துக்குடி- 796 பேர், நெல்லை- 688 பேர், திருப்பூர்- 443 பேர், திருச்சி- 746 பேர், வேலூர்- 614 பேர், விழுப்புரம்- 466 பேர், விருதுநகர்- 269 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் நேற்று மட்டும் 24,898 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: