நகைக்கடை உரிமையாளரை தாக்கி 282 கிராம் தங்கம் ரூ.5 லட்சம் கொள்ளை

சென்னை: சென்னை படாளம் பகுதியை சேர்ந்தவர் சுராஜ் (49). இவர், சவுகார்பேட்டையில் ஜெய் ஜூவல்லர்ஸ் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் 282 கிராம் தங்கம் மற்றும் கடையில் நகை விற்பனை செய்த ரூ.5 லட்சத்தை ஒரு பையில் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு தனது பைக்கில் புறப்பட்டார். பெரியமேடு அல்லிக்குளம் சந்திப்பு சாலையில் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த 2 பேர், திடீரென சுராஜின் தலையில் ஓங்கி அடித்தனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது சுராஜ் பைக் முன்பு வைத்திருந்த நகை மற்றும் பணம் வைத்திருந்த பையை எடுத்து கொண்டு இருவரும் தப்பினர். இதுபற்றி பெரியமேடு காவல் நிலையத்தில் சுராஜ் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>