நீதிமன்ற நடுவரை மிரட்டியவர் கைது

சென்னை: சாத்தான்குளம், பெனிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கொலை வழக்கை விசாரிக்கும் நீதிமன்ற நடுவர் இவ்வழக்கில் முறையான நீதிமன்ற விசாரணை நடத்தவில்லை எனவும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படியும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒருவர் கடிதம் அனுப்பியதாகவும், பின்னர் அதே நபர் நீதிமன்ற நடுவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் சென்னையில் உள்ள நீதிமன்ற நடுவர் அல்லது நீதிபதி யாரையேனும் கொலை செய்துவிடுவதாக முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து வி-7 நொளம்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி மிரட்டல் விடுத்தவர் முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (56) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.வி சாரணையில், வெங்கடேசன், தென்மேற்கு ரயில்வே துறையில் உதவி இஞ்சின் ஓட்டுநராக பணிபுரிந்து, 2019ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரியவந்தது. பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories:

>