×

28ம் ஆண்டில் திமுகவுக்கு பக்கபலமாக இருப்போம்: மதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது: பொதுச் செயலாளர் வைகோ பேட்டி

சென்னை: மதிமுகவை என்றைக்கும், யாராலும் வீழ்த்த முடியாத இயக்கமாக வீறு கொண்டு எழும். அந்த முழு நம்பிக்கையோடு 28வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். மதிமுகவின் 28ம் ஆண்டு தொடக்க விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையாட்டி சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.  இதை தொடர்ந்து அவர் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் ஜீவன், கழககுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறுகையில், ‘ கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னர் பெரியார், பேரறிஞர் அண்ணா இந்த மண்ணில் விதைத்த சுயமரியாதை தன்மானம், தமிழர் உரிமை விதைகள் இன்றைக்கு  விருட்சமாக 27 ஆண்டுகள் கழித்து 28வது ஆண்டில் மதிமுக அடியெடுத்து வைக்கிறது. இந்த 28ம் ஆண்டில் திமுகவுக்கு பக்கபலமாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அறுந்துணையாகவும் இருந்து சமூக நீதி, கூட்டாட்சி தத்துவம்,  மதசார்பின்மை, இந்த கொள்கைகளை பாதுகாப்பதற்கும், தமிழக வாழ்வாதாரத்தை காப்பதற்கும் 28ம் ஆண்டு தொடங்க நாளில் மதிமுக, 27 ஆண்டுகள் எவ்வளவோ சோதனைகளை சந்தித்தாலும், தன்னலமில்லாத லட்சக்கணக்கான  தொண்டர்கள் இந்த இயக்கத்தை காப்பாற்றி இருக்கிறார்கள்.

அவர்கள் தான் இந்த கட்சியின் காவல் தெய்வங்கள். அவர்கள் தான் இந்த இயக்கத்தை இன்னும் பாதுகாப்பார்கள். வாழையடி, வாழையாக இந்த இயக்கம் என்றைக்கும் யாராலும் வீழ்த்த முடியாத இயக்கமாக வீறு கொண்டு எழும். அந்த முழு  நம்பிக்கையோடு 28வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்’ என்றார்.Tags : Dimu ,General Secretary ,Viko , We will support DMK in 28th: No one can defeat DMK: Interview with General Secretary Vaiko
× RELATED போக்குவரத்து தொழிலாளர்களின்...